ஆகஸ்ட் 1, 2019 அன்று மீள் திருத்தம் செய்யப்பட்டது.
தகவல்களைச் சேகரித்தல், பயன்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துதல் தொடர்பான எங்கள் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிப்பதே இந்தக் கொள்கையின் நோக்கம். இக் கொள்கை, எங்கள் விருப்பப்படி அவ்வப்போது மாற்றியமைக்கப்படலாம் என்பதை நினைவில் கொண்டு, எனவே அடிக்கடி இவ்விணையதளத்தில் நுழைந்து சரிபார்க்கவும். கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை நாம் உங்களுக்கு அறியத்தருவதுடன், மீள் திருத்தம் செய்யப்பட்ட திகதியும் மாற்றப்படும்.
லக்கி1 பயன்பாட்டிற்க்கு பதிவு செய்யப்பட்ட பயனராக, நீங்கள் தன்னிச்சையாக வழங்கும் தகவல்களை லக்கி1 சேகரிக்கிறது.
சில மூன்றாம் தரப்பு சமூக வலைப்பின்னல் தளங்களை (“SNS ”) பயன்படுத்தி நீங்கள் லக்கி 1 இல் பதிவுசெய்யும்போது (பேஸ்புக் மற்றும் கூகிள் + உட்பட, ஏனைய வலைத்தளங்கள்) உங்களின் சில தகவல்களை முன்கூட்டியே நிரப்ப உங்கள் பொது SNS பதிவுகளைப் பயன்படுத்தலாம், உ+ம் . உங்கள் பெயர் அல்லது மின்னஞ்சல், பின்னர் அதை உறுதிப்படுத்த உங்களுக்குக் அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட தகவல் காண்பிக்கப்படும். இதை சமர்ப்பிக்கும் முன் இந்த தகவலை வைத்திருக்க அல்லது மாற்றம் செய்ய விரும்பினால் அது முற்றிலும் உங்களுடைய விருப்பமாகும். உங்கள் வெளிப்படையான அனுமதியின்றி லக்கி 1 எந்த SNS பதிவுகளையும் பயன்படுத்தாது. லக்கி1 இல் உங்கள் பயனர் கணக்கை உருவாக்கவும்; லக்கி1 சேகரிக்கும் தகவல் நீங்கள் ஃபேஸ்புக் அல்லது google + உடன் வைத்திருக்கும் தனியுரிமை தகவல் கொள்கைகளைப் பொறுத்தது.
தனிப்பட்ட தகவல்களில் உங்கள் மொபைல் எண், தேசிய அடையாள அட்டை எண் மற்றும் மின்னஞ்சல் ஆகியவை உள்ளடங்கும். உங்கள் பயனர் கணக்கை ஃபேஸ்புக் அல்லது கூகிள் + வழியாக உருவாக்க முடிவு செய்தால், நீங்கள் ஏற்கனவே வழங்கிய தனிப்பட்ட தகவல்களை (உங்கள் “உண்மையான” பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் நீங்கள் பேஸ்புக் அல்லது கூகிள் + வழியாக பொதுவில் கிடைக்கச் செய்யும் பிற தகவல்கள் போன்றவை) பயன்படுத்துகிறீர்கள்.
அடையாளம் காணாத தகவல் பதிவு மற்றும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக நீங்கள் வழங்கும் பிற தகவல்களையும் லக்கி1 சேகரிக்கிறது, அவை உங்களை அடையாளம் காண அல்லது தொடர்பு கொள்ள நியாயமான முறையில் பயன்படுத்த முடியாது (உ+ம்: மொபைல் மென்பொருள் பதிப்பு) (“அடையாளம் காணாத தகவல்”). லக்கி 1 உங்கள் தனிப்பட்ட தகவல்களை அடையாளம் காணாத தகவலுடன் இணைத்து, மற்ற லக்கி1 பயனர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் ஒன்றிணைத்து உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கவும், சேவையின் தரம் மற்றும் மதிப்பை மேம்படுத்தவும் லக்கி1 சேவை செயல்படுகிறது. லக்கி1 உங்களுக்கு குறிப்பான ஒரு சேவையை வழங்க, ஒருங்கிணைக்கப்படாத தகவல்களையும் பயன்படுத்தலாம், உதாரணமாக உங்கள் விருப்பத்தேர்வுகள் அல்லது கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப ஒரு தயாரிப்பை உங்களுக்கு வழங்கப்படும்.
நீங்கள் லக்கி1 உடன் பதிவு செய்யும்போது, நீங்கள் வழங்கும் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படாது. உங்கள் பெயர், புகைப்படம், இருப்பிடம், பிறந்த திகதி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் உங்களுக்கு சிறந்த தனிப்பயனாக்கம் மற்றும் பொருத்தமான உள்ளடக்கத்தை வழங்க மட்டுமே பயன்படுத்தப்படும்.
அனைத்து பயனர்களும் தங்கள் கணக்கில் உள்ளிட்டுள்ள தனிப்பட்ட தகவலை மதிப்பாய்வு செய்யவோ, புதுப்பிக்கவோ, திருத்தவோ முடியும்.
எங்கள் சேவையில் பிற மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகளுக்கான இணைப்புகள் உள்ளன. இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் மற்றொரு வலைத்தளம் அல்லது ஆன்லைன் சேவையைப் பார்வையிட நீங்கள் தேர்வுசெய்தால், அந்த மூன்றாம் தரப்பினரின் வலைத்தளம் அல்லது ஆன்லைன் சேவைக்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள். மூன்றாம் தரப்பு வலைத்தளத்தைத் திறப்பது இணைப்பு நிரல் குக்கீகளின் நிறுவலை தூண்டக்கூடும். லக்கி 1 ஒரு வலைத்தளம் அல்லது ஆன்லைன் சேவையுடன் இணைக்கப்படலாம் என்பது, அந்த மூன்றாம் தரப்பினருடனான எங்கள் இணைப்பின் ஒப்புதல், அங்கீகாரம் அல்லது பிரதிநிதித்துவமோ அல்லது அவர்களின் தனியுரிமை அல்லது தகவல் பாதுகாப்புக் கொள்கைகள் அல்லது நடைமுறைகளின் ஒப்புதலோ அல்ல. எந்தவொரு தகவலையும் வழங்குவதற்கு முன் அல்லது அத்தகைய வலைத்தளங்கள் அல்லது சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் பார்வையிடும் பிற வலைத்தளங்கள் அல்லது ஆன்லைன் சேவைகளின் தனியுரிமைக் கொள்கைகள் அல்லது அறிக்கைகளைப் வாசிக்குமாறு லக்கி1 உங்களை வலியுறுத்துகிறது.
உங்கள் தகவலின் பாதுகாப்பைப் பற்றி லக்கி1 அக்கறை கொண்டுள்ளது. சேகரிக்கப்பட்ட மற்றும் பராமரிக்கப்படும் தகவல்களின் நேர்மை மற்றும் பாதுகாப்பைப் பேண லக்கி1 வணிகரீதியாக நியாயமான பாதுகாப்புகளைப் பயன்படுத்துகிறது. எவ்வாறாயினும், நீங்கள் எங்களுக்கு வழங்கிய எந்தவொரு தகவலினதும் பாதுகாப்பை லக்கி1 உறுதிப்படுத்தவோ அல்லது உத்தரவாதம் அளிக்கவோ முடியாது அல்லது சேவையின் தகவல்களை அங்கீகரிக்கப்படாத நபர்களால் அணுகவோ, வெளிப்படுத்தவோ, மாற்றவோ அல்லது அழிக்கவோ கூடாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. லக்கி1 உங்கள் கிரெடிட் கார்டு தகவல், உள்நுழைவு தகவல் அல்லது தேசிய அடையாள எண்களை கோராது. ரகசியமானதாக நீங்கள் கருதும் எந்தவொரு தகவலையும் வெளியிடுவதிலிருந்து பாதுகாக்கவும், தவிர்க்கவும் லக்கி1 பரிந்துரைக்கிறது.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களை win@lucky1.lk மூலம் தொடர்பு கொள்ளவும் அல்லது 0117 989 989 ஐ அழைக்கவும்.